மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; முதியவர் உள்பட 2 பேர் சாவு


மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; முதியவர் உள்பட 2 பேர் சாவு
x
தினத்தந்தி 8 April 2022 2:04 AM IST (Updated: 8 April 2022 2:04 AM IST)
t-max-icont-min-icon

கொட்டாம்பட்டி அருகே மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் முதியவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

கொட்டாம்பட்டி,
 
கொட்டாம்பட்டி அருகே மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் முதியவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

மரத்தின் மீது மோதிய மோட்டார் சைக்கிள்

திருச்சி மாவட்டம் மணப்பாறை, பாரதியார் நகரை சேர்ந்தவர் நல்லதம்பி. இவருடைய மகன் வீரப்பன் (வயது 61). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் மணப்பாறையில் இருந்து நத்தம் வந்தார்.
மீண்டும் கொட்டாம்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த போது பின்னால் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் பின்னால் அமர்ந்து வந்து உள்ளார். மணப்பச்சேரி விலக்கு அருகே வந்த போது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மீது மோதியது.

2 பேர் சாவு

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் வீரப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.உடன் வந்த நபர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
2 பேரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான மற்றொரு நபர்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story