அடுக்குமாடி குடியிருப்பில் நீச்சல் குளத்தில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவன் சாவு


அடுக்குமாடி குடியிருப்பில் நீச்சல் குளத்தில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவன் சாவு
x
தினத்தந்தி 8 April 2022 6:17 PM IST (Updated: 8 April 2022 6:17 PM IST)
t-max-icont-min-icon

அடுக்குமாடி குடியிருப்பில் நீச்சல் குளத்தில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு கூட்ரோடு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜேஷ். இவரது மகன் சூர்யா(வயது 12). பெருமாட்டுநல்லூர் கூட்ரோடு அருகே உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். சிறுவன் சூர்யா கடந்த 5-ந் தேதி அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தான்.

அப்போது திடீரென எதிர்பாராத விதமாக சூர்யா நீச்சல் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி மூச்சுத் திணறிக் கொண்டிருந்தான். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story