ரூ.3½ கோடி கோவில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
சிங்கப் பெருமாள் ஊராட்சியில் கோவில் ஆக்கிரமிப்பு நிலம் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமைத்து கட்டியிருந்த வீடுகளை இடித்து அகற்றினார்கள்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப் பெருமாள் ஊராட்சியில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பல ஏக்கர் நிலங்கள் சொந்தமாக உள்ளது. இந்த நிலையில் சிங்கப் பெருமாள் ஊராட்சிக்குட்பட்ட ஜெ.ஜெ.நகரில் இக்கோவிலுக்கு சொந்தமான சுமார் 2½ ஏக்கர் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து 10-க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டியுள்ளனர். அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் ஆக்கிரமிப்பை அகற்ற பல முறை கூறியும் அவர்கள் கேட்கவில்லை.
இந்த நிலையில் நேற்று இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன் தலைமையில் ஆலய நில தாசில்தார் பிரபாகரன், செயல் அலுவலர் வெங்கடேசன், கோவில் மேலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் போலீஸ் உதவியுடன் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமைத்து கட்டியிருந்த வீடுகளை இடித்து அகற்றினார்கள். இதன் மதிப்பு 3½ கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story