கஞ்சா கடத்தி வந்த 3 வாலிபர்கள் கைது
கஞ்சா கடத்தி வந்த 3 வாலிபர்கள் கைது
கூடலூர்
தமிழக-கர்நாடக எல்லையான கக்கநல்லாவில் சப்-இன்ஸ்பெக்டர் மணிதுரை தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடகாவில் இருந்து கூடலூர் நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தினர். அதில் வந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். அதில், 1 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டு இருப்பது தெரியவந்தது. பின்னர் கார் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட 3 வாலிபர்களையும், மசினகுடி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள், கூடலூர் ஹெல்த்கேம்ப் பகுதியை சேர்ந்த ரத்தின்(வயது 23), காசிம்வயலை சேர்ந்த சல்மான் (23), சங்கர் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
Related Tags :
Next Story