அம்மையநாயக்கனூரில் குதிரை வாகனத்தில் முத்துமாரியம்மன் வீதிஉலா


அம்மையநாயக்கனூரில் குதிரை வாகனத்தில் முத்துமாரியம்மன் வீதிஉலா
x
தினத்தந்தி 8 April 2022 8:30 PM IST (Updated: 8 April 2022 8:30 PM IST)
t-max-icont-min-icon

அம்மையநாயக்கனூரில் குதிரை வாகனத்தில் முத்துமாரியம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

கொடைரோடு:
அம்மையநாயக்கனூர் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. திருவிழாவின் இறுதிநாளான நேற்று  நாடார் மண்டகபடி சார்பாக அம்மன் குதிரை வாகனத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி, அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
மேலும் பக்தர்கள் அக்னி சட்டி, பறவைக்காவடி, கரும்பு தொட்டில் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதைத்தொடர்ந்து உரிமரம் ஏறுதல், மஞ்சள் நீராட்டு, முளைப்பாரி ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. முடிவில் அம்மன் பூஞ்சோலை சென்றடையும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் தங்கப்பாண்டி, செயலாளர் காசிப்பாண்டி, பொருளாளர் ராமகிருஷ்ணன், நாடார்கள் உறவின்முறை தலைவர் சுந்தர்ராசன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். திருவிழாவையொட்டி நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமார், அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி ஆகியோர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Next Story