தம்பியை கத்தியால் குத்திய தொழிலாளி
தம்பியை கத்தியால் குத்திய தொழிலாளி
சிங்காநல்லூர்
கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் மாசாணியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கோபால். இவருடைய மகன்கள் மனோஜ் குமார் மதன்குமார். கட்டிட தொழிலாளர்கள். மனோஜ்குமாருக்கு குடிப் பழக்கம் உள்ளது. எனவே அவரை குடும்பத்தினர் கண்டித்து உள்ளனர்.
இந்த நிலையில் மனோஜ்குமாரிடம் குடிப்பழக்கத்தை நிறுத்துமாறு மதன்குமார் கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மனோஜ் குமார் வீட்டின் முதல் தளத்தில் மது குடித்துக்கொண்டு இருந்தார். இதை மதன்குமார் கண்டித்துள்ளார்
இதனால் ஆத்திரம் அடைந்த மனோஜ்குமார், மதன் குமாரை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி சென்றார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story