மருத்துவ மதிப்பீட்டு முகாம்


மருத்துவ மதிப்பீட்டு முகாம்
x
தினத்தந்தி 8 April 2022 11:15 PM IST (Updated: 8 April 2022 11:15 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது.

இளையான்குடி, 
சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இளை யான்குடி வட்டார வள மையத்தின் சார்பாக மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.  சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பீட்டர் லெமாயூ முன்னிலை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் சார்லஸ் அனைவரையும் வரவேற்றார். முகாமில் இளையான்குடி தாசில்தார் ஆனந்த், பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் ஆகியோர் மாற்றுத்திறன் குழந்தைகள், அரசின் உதவித் தொகை மற்றும் பல்வேறு சலுகைகள் பெற வழிவகை செய்தனர். முகாமில் 150-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறன் குழந்தைகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.  மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் பயிற்று னர்கள், சிறப்பாசிரியர்கள், கணக்காளர்கள், வட்டார வள மைய பணியாளர்கள் கலந்து கொண்டனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிரான்சிஸ், இளையான்குடி மேல்நிலைப்பள்ளி தாளாளர் முசாபர் அப்துல் ரகுமான் தலைமை ஆசிரியர் முகமது இலியாஸ் மற்றும் அரசு அதிகாரிகள்கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் சம்சும் ஆரிபா செய்திருந்தார்.

Next Story