நெகமம் காட்டன் சேலை விற்பனை அதிகரிப்பு நெசவாளர்கள் மகிழ்ச்சி


நெகமம் காட்டன் சேலை விற்பனை அதிகரிப்பு நெசவாளர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 8 April 2022 11:22 PM IST (Updated: 8 April 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

கோடைகாலம் தொடங்கியதால் நெகமம் காட்டன் சேலை விற்பனை அதிகரித்து உள்ளது. இதனால் நெசவாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

நெகமம்

கோடைகாலம் தொடங்கியதால் நெகமம் காட்டன் சேலை விற்பனை அதிகரித்து உள்ளது. இதனால் நெசவாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

காட்டன் சேலைகள்

சேலையில் பட்டு, பேன்சி, காட்டன், ஜர்தோசி என எத்தனை ரகங்கள் இருந்தாலும் சின்ன சின்ன இழைகளை கொண்டு நளினமாக நெய்யப்படும் கைத்தறி காட்டன் சேலைகள் என்றால் பெண்களுக்கு கொள்ள பிரியம். இதனால் நெகமம் காட்டன் சேலைக்கு தனி மவுசு உண்டு.  

6 கெஜம், 8 கெஜம் நூல் சேலை என்றாலே தமிழகத்தில் நெகமம், சின்னாளபட்டி ஊர்கள் தான் நினைவுக்கு வரும். மற்ற ஊர்களில் நூல் சேலை நெசவு நின்று விட்டாலும், நெகமத்தில் இப்போதும் 300-க்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். 

300 குடும்பத்தினா்

நெகமம், காட்டம்பட்டி, வீதம்பட்டி, குள்ளக்காபாளையம், காணியாலாம் பாளையம், சேரிபாளையம், எம்மேகவுண்டன் பாளையம், தாசநாயக்கன் பாளையம், வதம்பச்சேரி ஜக்கார் பாளையம் உள்ளிட்ட 20 கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சேலை நெசவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

 இங்கு தயாரிக்கப்படும் நூல் சேலைகள் தான் சவுத்காட்டன் என்றும், கோவை காட்டன் என்றும் உலகமெங்கும் விற்பனை ஆகி வருகிறது. இந்த ரகங்கள் குறைந்த பட்ச விலையாக ரூ.1000 முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

விற்பனை அதிகரிப்பு

தற்போது கோடைகாலம் என்பதாலும், கேரளாவில் சித்திரை விசு பண்டிகை என்பதாலும் தற்போது காட்டன் சேலை விற்பனை அதிகரித்து உள்ளது. இதனால் நெசவாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

இது குறித்து காட்டன் சேலை உற்பத்தி செய்து வரும் நெசவாளர்கள் கூறியதாவது:- 

நெகமம் காட்டன் நூல் சேலைக்கு வயது 200 தாண்டினாலும் அதன் மவுசு குறையவில்லை. அதிகரித்துதான் வருகிறது. அதுபோன்று தற்போது காட்டனில் சுடிதாரும் உற்பத்தி செய்து வருகிறோம். 

நெசவாளர்கள் மகிழ்ச்சி

தற்போது ஆந்திரா, டில்லி, கர்நாடகா, கொல்கத்தா, கேரளாவில் அதிகளவில் விற்பனை ஆகிவருகிறது. ஒரு சேலை தயாரிக்க ஒரு குடும்பத்திற்கு 1½ நாள் ஆகும். ஒரு குடும்பத்தினர் ஒரு மாதத்திற்கு 18 சேலை வீதம் 12 மாதங்கள் சேர்ந்து 216 சேலைகள் உற்பத்தி செய்தாலும் விற்பனை ஆகிவிடும். 

கோடைவெயில் தற்போது சுட்டெரித்து வருவதால் பலர் காட்டன் சேலையை விரும்பி அணிகிறார்கள். இதனால் அதன் தேவை இன்னும் அதிகரித்து வருகிறது. 

எனவே கடந்த ஆண்டைவிட இந்து ஆண்டு விற்பனை அதிகரித்து உள்ளதால் மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story