பள்ளி சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த மெக்கானிக் கைது
பள்ளி சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த மெக்கானிக் கைது செய்யப்பட்டார்.
பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 4-ந் தேதி பள்ளிக்கு சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பென்னாகரம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பென்னாகரம் அருகே உள்ள சக்கல் நத்தம் பகுதியை சேர்ந்த மெக்கானிக் கிருஷ்ணன் (வயது24) என்பவர் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story