6 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்
6 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சேந்தமங்கலம்:
நாமக்கல் மாவட்டத்தில் 6 வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மல்லசமுத்திரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக (பொது) பணியாற்றி வந்த பி.சரவணன், புதுச்சத்திரம் (கிராம ஊராட்சி) வட்டார வளர்ச்சி அலுவலராகவும், புதுச்சத்திரம் (கிராம ஊராட்சி) வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த தி.சரவணன், கொல்லிமலை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கொல்லிமலை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த நடராஜன், பரமத்தி (கிராம ஊராட்சி) வட்டார வளர்ச்சி அலுவலராகவும், பரமத்தி கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த அசோகன், புதுச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், புதுச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த வனிதா, ராசிபுரம் (கிராம ஊராட்சி) வட்டார வளர்ச்சி அலுவலராகவும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த மலர்விழி, பள்ளிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story