கோடை சாகுபடி செய்த வயல்களில் பூச்சி மருந்து தெளிக்கும் பணி தீவிரம்
கோடை சாகுபடி செய்த வயல்களில் பூச்சி மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நீடாமங்கலம்:-
நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 52 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இதில் 50 ஆயிரம் ஏக்கரில் வேளாண் சார்ந்த பணிகளை விவசாயிகள் செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதால், நீடாமங்கலம் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் நெல் சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடந்தன. அப்போது 17,500 ஏக்கரில் சம்பா சாகுபடியும், 26 ஆயிரம் ஏக்கரில் தாளடி சாகுபடியும் நடந்தது. 1,800 ஏக்கரில் தென்னை சாகுபடியும், 100 ஏக்கரில் காய்கறி சாகுபடியும், 50 ஏக்கரில் மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்களையும் விவசாயிகள் சாகுபடி செய்தனர்.
இந்த நிலையில் நீடாமங்கலம் தாலுகா பகுதியில் இந்த ஆண்டு 2 ஆயிரம் ஏக்கரில் நிலத்தடி நீரை பயன்படுத்தி கடம்பூர், பரப்பனாமேடு, சித்தமல்லி மேல்பாதி, பூவனூர், அனுமந்தபுரம், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கோடை சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது கோடை சாகுபடி செய்த வயல்களில் நெற்பயிருக்கு பூச்சி மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story