பண்ருட்டி உணவகங்கள், பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு
பண்ருட்டியில் உணவகங்கள், பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
பன்ருட்டி,
பண்ருட்டியில் உள்ள உணகங்கள், கடைகளில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பி.கே.கைலாஷ்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சுப்பிரமணியன், நல்லதம்பி, சுந்தரமூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அதன்படி, கும்பகோணம் சாலை, லிங்க் ரோடு, கடலூர் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள துரித உணவகங்கள், பெட்டிக்கடைகள், இறைச்சி கடைகள், முட்டை கடைகள், பழக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
பறிமுதல்
ஆய்வின் போது, ஒரு முறை க்கு மேல் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் சுமார் 10 லிட்டர் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும் செயற்கை வண்ணம் சேர்த்து தயாரிக்கப்பட்ட 5 கிலோ சிக்கன் 65 பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் 20 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
அதேபோல் முட்டை கடைகளில் ஆய்வு செய்த போது, சந்தேகத்திற்கிடமான முட்டைகளை ஆய்வுக்காக எடுத்து சென்றனர். மேலும், கெட்டுப்போன, உடைந்த முட்டைகளை விற்பனை செய்யக்கூடாது என்று கடை உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.
Related Tags :
Next Story