பார்த்திபனூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பார்த்திபனூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பரமக்குடி.,
பரமக்குடி ஒன்றிய காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகளின் கூட்டமைப்பு சார்பில் பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூரில் பச்சைத் துண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செய லாளர் மலைச்சாமி தலைமை தாங்கினார். பொதுச் செய லாளர் அர்ச்சுனன், மாநில செயலாளர் முருகன், மாநில துணைத்தலைவர் மதுரைவீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் வேளாண் இடு பொருட்களான உரங்கள், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி ஆகியவற்றின் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும் கால்நடை தீவனங்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் சிவகங்கை மாவட்ட செய லாளர் அய்யனார், துணை செயலாளர் அக்கினி சாமி, பொருளாளர் தவம், பரமக்குடி தாலுகா செயலாளர் வேந்தை சிவா, ஒன்றிய நிர்வாகிகள் முத்துக்குமார், மாயாண்டி சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story