தையல் தொழிலாளி குத்தி கொலை


தையல் தொழிலாளி குத்தி கொலை
x
தினத்தந்தி 9 April 2022 11:31 PM IST (Updated: 9 April 2022 11:31 PM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம் அருகே தையல் தொழிலாளி குத்தி கொலை செய்யப்பட்டார்.

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் அருகே தையல் தொழிலாளி குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது அண்ணனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தையல் தொழிலாளி

கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 53), தையல் தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. 

இதனால் அவர் தனது தாயாருடன் வசித்து வந்தார். பாண்டியனின் அண்ணன் சந்தானம் (55). இவர் வெளியூரில் தங்கியிருந்து டிரைவராக வேலை பார்த்து வருகிறார். மேலும் இவர் குடும்ப செலவுக்கு பணம் கொடுத்து வந்தார்.

இவர் நேற்று வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். இதையடுத்து மாலையில் திடீரென பாண்டியன், சந்தானம் இடையே தகராறு ஏற்பட்டது. 

குத்தி கொலை 

இதில் ஆத்திரமடைந்த சந்தானம் அருகில் கிடந்த கத்திரிக்கோலால் பாண்டியனின் உடலில் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி கீழே விழுந்தார். இதற்கிடையில் சாந்தானம் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிறுமுகையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். 

அண்ணனுக்கு வலைவீச்சு

இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். 

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, சந்தானத்தை போலீசார் விலைவீசி தேடி வருகின்றனர். அண்ணன்-தம்பி தகராறில் தம்பி கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story