கிரிக்கெட் சூதாட்டம்: போலீஸ்காரர் உள்பட 11 பேர் கைது

கோலார் மாவட்டத்தில் 6 இடங்களில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக போலீஸ்காரர் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சம் ரொக்கம் மற்றும் 13 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோலார்:
சூதாட்டம்
கோலார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் கோலார் போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது மாவட்டத்தில் 6 இடங்களில் சூதாட்டம் நடப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 11 பேரை கைது செய்தனர். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கோலார் நகர போலீஸ் நிலைய போலீஸ்காரர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
11 பேர் கைது
ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இந்த சூதாட்டத்தில் மாஸ்தி போலீஸ் எல்லைக்குட்பட்ட பங்காருபேட்டை தாலுகா கே.ஜி. ஹள்ளியை சேர்ந்த சுப்ரமணி(36), கோலார் நகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் ஜூனய்த்(28), அம்பரீஷ்(24), கோலார் கல்பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த முனிராஜூ(37), குதூப் பாஷா(24), முகமத் ஷரீப்(29), சல்மான் (23), விஜயகாந்த் (36), சையத் அப்துல் சுபான் (28), வியஜ் சாகர் (29) உள்பட 11 பேரை கோலார் போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் மீது வழக்குப்பதிவு அந்தந்த பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சம் ரொக்கம் மற்றும் 13 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story