சிதம்பரத்துக்கு ரூ.127 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது பட்ஜெட்விளக்க கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேச்சு
சிதம்பரத்துக்கு ரூ.127 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று பட்ஜெட் விளக்க கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார்.
சிதம்பரம்,
சிதம்பரத்தில் நகர தி.மு.க. சார்பில், உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்து வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும், தமிழக அரசின் பட்ஜெடை மக்களுக்கு விளக்கும் வகையிலும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு தி.மு.க. நகர செயலாளரும், சிதம்பரம் நகராட்சி தலைவருமான கே.ஆர். செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
நகர அவை தலைவர் ராஜராஜன் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேசன், வி.என்.ஆர். கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அப்பு.சந்திரசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மக்களுக்காக உழைத்தார்
கூட்டத்தில் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலளரும், அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து தற்போது மக்கள் மீண்டு வந்துள்ளனர்.
தொற்று காலத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் களத்தில் இறங்கி மக்களுக்காக உழைத்தார். விவசாயத்துக்காக தனி பட்ஜெட்டை அறிவித்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவார். இதனால் விவசாயிகளுக்கு தற்போது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கும் திட்டங்கள் நேரடியாக செல்கிறது.
கூட்டு குடிநீர் திட்டம்
சிதம்பரம் நகர பகுதியில் வினியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இந்த நிலை கடந்த கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உருவானதாகும். இதை சரிசெய்து சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்கு ரூ.127 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் சிதம்பரம் நகரத்தை சீர்மிகு நகரமாக மாற்ற பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அப்பு.சத்திய நாராயணன், நகர இளைஞரணி அமைப்பாளர் மக்கள்.அருள், கட்சியின் செய்தி தொடர்பு செயலாளர் அரசகுமார், தகவல் தொழில் நுட்ப அணி துணை செயலாளர் சேகர், மாநில பொறியாளர் அணி அமைப்பாளர் துரை. கி. சரவணன், குமராட்சி ஒன்றிய செயலாளர் சங்கர், அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி,
தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஸ்ரீதர், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், கவுன்சிலர் சி.கே. ராஜன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story