கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஆனைமலையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதுடன், வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி
ஆனைமலையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதுடன், வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் சோதனை
பொள்ளாச்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்ைக மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆனைமலை அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத்துக்கு தகவல் கிடைத்து.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் ஆனைமலை பகுதியில் ரோந்து சென்றனர். செம்மனாம்பதி வாகன சோதனை சாவடி அருகில் மாந்தோட்டத்துக்கு வாலிபர் ஒருவர் தனது மொபட்டில் சாக்குமூட்டைகளை ஏற்றிச்சென்றார்.
ரேஷன் அரிசி பறிமுதல்
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த நபரை கண்காணித்து சென்றனர். அப்போது அந்த தோட்டத்தில் ஏராளமான சாக்கு மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன.
உடனே போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் ஆனைமலையை சேர்ந்த பிரதீப்குமார் (வயது 25) என்பதும், ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த கொண்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்ததுடன், அங்கு இருந்த 1 டன் மற்றும் 50 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story