பொள்ளாச்சி செஞ்சேரிப்புத்தூரில் ராமநவமி உற்சவ விழா
பொள்ளாச்சி, செஞ்சேரிப்புத்தூரில் ராமநவமி உற்சவ விழா நடந்தது. இதல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி, செஞ்சேரிப்புத்தூரில் ராமநவமி உற்சவ விழா நடந்தது. இதல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராமநவமி உற்சவம்
பொள்ளாச்சி சத்திரம் வீதியில் உள்ள ஸ்ரீ சீதாராம ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மிருத்திகா பிருந்தாவனம் கோவிலில் ஸ்ரீராமநவமி உற்சவம் விழா கடந்த 2-ந் தேதி விமரிசையாக தொடங்கியது.
இங்கு காலை 9 மணிக்கு புனர்வசு நட்சத்திரம் ரிஷப லக்னத்தில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ரதா ரோஹணம் மற்றும் மற்றும் ரத உற்சவமும் நடந்தது. 9.45 மணிக்கு தேர் புறப்பாடு மற்றும் திருவீதி உலா நடந்தது.
குதிரை வாகன புறப்பாடு
இதனைத் தொடர்ந்து இரவு தேர்நிலை சேர்தல், குதிரை வாகன புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ராமச்சந்திர மூர்த்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதுபோன்று பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில் ராம நவமியை முன்னிட்டு மங்கல இசை, ஸ்ரீசீதா ராமர் திருக்கல்யாணம், உபசார பூஜைகள், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடந்தது.
ஸ்ரீசீதா ராமர் கல்யாண கோலத்தில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செஞ்சேரிப்புத்தூர்
இதேபோல் சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரி புத்தூரில் உள்ள காரண வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீராமநவமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story