நெகமம் பகுதியில் கோடைகாலத்தில் கால்நடைகளுக்கு கைகொடுக்கும் பசுந்தீவனம்

நெகமம் பகுதியில் கோடைகாலத்தில் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கை கொடுப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
நெகமம்
நெகமம் பகுதியில் கோடைகாலத்தில் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கை கொடுப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கறவை மாடுகள்
நெகமம் மற்றும் அதன் சுற்று பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் உபதொழிலாக கறவை மாடுகள் வளர்த்து பால் உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றனர்.
கறவை மாடுகளுக்கு வைக்கோல், நிலக்கடலை செடி, சோளத்தட்டு ஆகிய உலர் தீவனங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதுபோன்று தோட்டங்களில் பயிர்களுக்கு இடையே வளரும் புற்களும் பசுந்தீவனமாக கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நெகமம் பகுதியில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பயிர்களுக்கு நடுவே வளர்ந்த புற்கள் கருகிவிட்டன.
விவசாயிகள் மகிழ்ச்சி
இதற்கிடையே விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் ஊடுபயிராக வளர்த்து வரும் பசுந்தீவனங்களான யானைப்புல், சீமைப்புல் ஆகிய தீவன புற்கள் தற்போது பெரிதும் கை கொடுத்து வருகிறது.
வெயில் நேரத்திலும் இந்த புற்கள் நன்றாக வளர்ந்து வருவதால், கால்நடை களுக்கு பசுந்தீவனம் பற்றாக்குறை ஏற்படவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
நெகமம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மாடுகள், ஆடுகளை வளர்த்து வருகிறார்கள். இதில் மாடுகளுக்கு உலர் தீவனம் கொடுப்பதுடன் அதற்கு பசுந்தீவனமும் கட்டாயம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் பால் உற்பத்தி அதிகமாக இருக்கும்.
பசுந்தீவனம்
இந்த நிலையில் வெயில் காரணமாக புற்கள் காய்ந்து விட்டதால், தோட்டங்களில் ஊடுபயிராக வளர்க்கப்படும் கோ-3, கோ-4 ரக சீமை மற்றும் யானை வகை புற்கள் தற்போது நன்றாக கை கொடுத்து வருகிறது.
50-க்கும் மேற்பட்ட ஏக்கரில் வளர்க்கப்பட்டு வரும் இந்த பசுந்தீவனத்துக்கு கரும்பு போன்று கரணை ஊன்றினால் போதும். ஊடுபயிராகதான் வளர்ப்பதால், தென்னைக்கு பாய்ச்சும் தண்ணீரே இதற்கும் போதும். 45 நாளில் அறுவடைக்கு தயாராகிவிடுகிறது.
அதில் இருந்து 60-வது நாள் வரை அறுவடை செய்யலாம். ஆண்டுக்கு ஒரு ஏக்கருக்கு 50 டன் வரை மகசூல் கிடைக்கும்.
தட்டுப்பாடு ஏற்படாது
மேலும் தெளிப்புநீர் பாசனம் அமைத்தால் சீமைப்புல் நன்கு செழித்து வளரும். இதில் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்து்ககு நகர்த்திக்கொள்ளும் வாட்டன் கன் என்ற அமைப்பு இருப்பதால் இதுவும் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.
எனவே விவசாய நிலத்தில் ஊடுபயிராக இந்த பசுந்தீவனத்தை வளர்த்தால் கால்நடைகளுக்கு தீவனம் தட்டுப்பாடு ஏற்படாது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story






