புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 11 April 2022 2:40 AM IST (Updated: 11 April 2022 2:40 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

மின்பெட்டி சீரமைக்கப்பட்டது
கருமாவிளை-திக்கணங்கோடு சாலையில் புனத்திட்டை பகுதியில் சாலையோரம் ஒரு மின்கம்பம் உள்ளது. அந்த மின் கம்பத்தில் தெருவிளக்கு சுவிட்சு மற்றும் மின்மீட்டர் பெட்டி சேதமடைந்து கீழே விழும் நிலையில் தொங்கி கொண்டிருந்தது. இதுபற்றி ‘தினத்தந்தி' புகார் பெட்டியில் நேற்று முன்தினம் செய்தி வெளியிடப்பட்டது. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்பெட்டியை சீரமைத்தனர். செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தெப்பக்குளம் சீரமைக்கப்படுமா? 
மருங்கூர் சுப்பிரமணியசாமி கோவிலில் தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளம் தூர்வாரப்படாமல் காணப்படுகிறது. மேலும், தண்ணீர் வரும் கால்வாயானது பழுதடைந்து உள்ளது. இதனால் தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே தெப்பக்குளத்தை தூர்வாரி, தண்ணீர் வரும் கால்வாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                  -விஷ்ணு ராம்ஜி, குமாரபுரம் தோப்பூர்.

சாலை வசதி வேண்டும்
குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டு கீழத்தெருவில்  சுமார் 20-க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. ஆனால் இந்த தெருவில் அடிப்படை வசதிகளில் ஒன்றான சாலை வசதி இதுவரை இல்லை. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே சாலை வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                                                            -அபு தாஹீர், குளச்சல்.

வீணாகும் குடிநீர்
ஈத்தாமொழி- ராஜாக்கமங்கலம் மேற்கு கடற்கரை சாலையில் பண்ணையூர் பகுதியில் சாலையின் நடுவே குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் பாய்ந்து செல்கிறது. மேலும், அந்த பகுதியில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைத்து, சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                                           -நாகராஜன், ராஜாக்கமங்கலம்.

வடிகால் வசதி தேவை
குலசேகரபுரம் அம்மன் கோவில் தெருவில் முறையான வடிகால் வசதி இல்லை. இதனால் மழைநீருடன் கழிவு நீர் கலந்து குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் கொசு உற்பத்தி அதிகமாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே வடிகால் வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                                                         -இளங்கோ, குலசேகரபுரம்.


Next Story