மறைமலைநகர் நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


மறைமலைநகர் நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 April 2022 7:35 PM IST (Updated: 11 April 2022 7:35 PM IST)
t-max-icont-min-icon

மறைமலைநகர் நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சியில் உள்ள பாவேந்தர் சாலை, கம்பர் சலை, அண்ணா சாலை போன்ற பகுதிகளில் உள்ள கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாக மறைமலைநகர் நகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் வந்தது. இதனையடுத்து, நகராட்சி சுகாதார ஆய்வாளர் அந்த பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்தபோது, கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது தெரியவந்தது. 

இதனையடுத்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு அபராத தொகை விதிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.3 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


Next Story