வாலாஜாபாத் ஒன்றியத்தில் 3 அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறப்பு


வாலாஜாபாத் ஒன்றியத்தில் 3 அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறப்பு
x
தினத்தந்தி 11 April 2022 7:43 PM IST (Updated: 11 April 2022 7:43 PM IST)
t-max-icont-min-icon

வாலாஜாபாத் ஒன்றியத்தில் 3 அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறப்பு விழா நடைபெற்றது.

காஞ்சீபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான தென்னேரி ஏரியை சுற்றிலும், விவசாயிகள் நெற்பயிரிட்டு அறுவடை செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் தென்னேரியை சுற்றி உள்ள பல கிராமங்களில் தமிழக அரசின் சார்பில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கபடும். தற்போது அறுவடை தொடங்கியுள்ள நிலையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைக்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்னேரி, தொள்ளாழி, குண்ணவாக்கம் ஆகிய கிராமங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில், காஞ்சீபுரம் எம்.பி. செல்வம், உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் வாலாஜாபாத் ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன், துணைத் தலைவர் சேகர், ஒன்றிய கவுன்சிலர் அமலிசுதா, ஊராட்சி மன்ற தலைவர்கள் கலையரசி, சுல்தான் ஹசீனா பேகம், புவனேஸ்வரி குப்புசாமி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வினோபாஜி, மற்றும் ஏராளமான உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story