சேந்தமங்கலம் அருகே வாகனம் மோதி மரம் வெட்டும் தொழிலாளி பலி


சேந்தமங்கலம் அருகே வாகனம் மோதி மரம் வெட்டும் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 11 April 2022 11:26 PM IST (Updated: 11 April 2022 11:26 PM IST)
t-max-icont-min-icon

சேந்தமங்கலம் அருகே வாகனம் மோதி மரம் வெட்டும் தொழிலாளி பலி

சேந்தமங்கலம்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் தினகரன் (வயது 40). மரம் வெட்டும் தொழிலாளி. இவர் சேந்தமங்கலம் அருகே உள்ள நாச்சிபுதூர் பகுதியில் தங்கி மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவர் நேற்று சேந்தமங்கலம் அருகே நாச்சிபுதூரில் இருந்து காரவள்ளிக்கு செல்லும் பிரதான சாலையில் நடந்து சென்றார். 
அப்போது சாலையை கடக்க முயன்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சேந்தமங்கலம் போலீசார் தினகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தில் வந்தவரை தேடி வருகின்றனர். 
விபத்தில் பலியான தினகரனுக்கு சத்தியா (34) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story