குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்


குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்
x
தினத்தந்தி 11 April 2022 11:28 PM IST (Updated: 11 April 2022 11:28 PM IST)
t-max-icont-min-icon

குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் மக்கள் சக்தி இயக்கம் வலியறுத்தியுள்ளது.

பெரம்பலூர்
பெரம்பலூரில் மக்கள் சக்தி இயக்க நிறுவனர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி 94-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மக்கள் சக்தி இயக்க சிறப்பு கூட்டம், மாநில துணைத் தலைவர் க. பெரியசாமி தலைமையில் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் மருத்துவர் கோசிபா, மாவட்டச் செயலாளர் ஜி.சிவகுமார், மாவட்ட இணைச் செயலாளர் செங்கோட்டையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.10 ஆயிரம் கோடியில் தொழில் திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து சட்டப்பேரவையில் அறிவித்த தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது. பாடாலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரஞ்சன்குடி கோட்டையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்த வேண்டும். பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். பிரதான சாலைகளில் குப்பைத் தொட்டிகள் வைத்து, உடனுக்குடன் அகற்றி குப்பையில்லா நகரமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், மாவட்ட கலெக்டர்களஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஏற்படும் இடர்பாடுகளை களைந்திட வேண்டும் என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட இணைச் செயலாளர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

Next Story