மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தி தற்கொலை செய்த வியாபாரி


மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தி தற்கொலை செய்த வியாபாரி
x
தினத்தந்தி 14 April 2022 2:42 PM IST (Updated: 14 April 2022 2:42 PM IST)
t-max-icont-min-icon

மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத்தகராறில் கத்தியால் குத்தி வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

பூந்தமல்லி, 

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் சேக்கிழார் நகர், கவி கம்பர் சாலையை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 50). இவர் தன்னுடைய வீட்டின் அருகிலேயே பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

நேற்று முன்தினம் கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரகாஷ், வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து தனது தொடையில் குத்தி கொண்டார். இதில் ரத்தம் அதிக அளவில் வெளியேறியதால் மயங்கினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள், பிரகாசை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், பிரகாஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
1 More update

Next Story