காஞ்சீபுரம் அருகே விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை


காஞ்சீபுரம் அருகே விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை
x
தினத்தந்தி 14 April 2022 2:48 PM IST (Updated: 14 April 2022 2:48 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரத்தை அடுத்த திருப்புட்குழி தாமரைக்குளம் தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 45). கொத்தனார். இவரது மனைவி வளர்மதி. குடும்பத்தகராறு காரணமாக கணவருடன் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்நிலையில், மனமுடைந்த ஜெகதீசன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு பாலுசெட்டி சத்திரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த அவரது மனைவி வளர்மதி பாலுசெட்டி சத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரரித்து வருகின்றனர்.
1 More update

Next Story