தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
ஆபத்தான மரம்
பந்தலூர் அருகே உள்ள பிதிர்காடு பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது பாட்டவயல் செல்லும் சாலைஓரத்தில் உள்ள அபாயகரமான மரம் சாய்ந்து மற்றொரு மரத்தின் மேல் தாங்கி நிற்கிறது. இதனால் அந்தமரமும் எந்த நேரத்திலும் கீழே விழக்கூடிய அபாய நிலையில் இருக்கிறது. எனவே சாலை ஓரத்தில் அபாயகரமாக இருக்கும் அபாய மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும்.
கதிர்வேல், பாட்டவயல்.
அடிக்கடி விபத்துகள்
கிணத்துக்கடவு அருகே உள்ள சொக்கனூர், வடபுதூர், சிங்கையன்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அளவுக்கு அதிகமாக கனிம வளங்கள் லாரிகளில் ஏற்றப்பட்டு கிராமப்புற சாலையில் வேகமாக செல்கிறார்கள். இதனால் அங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதுடன், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கடும் இடையூறாக உள்ளது. எனவே இதனை தடுக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருப்புச்சாமி, சொக்கனூர்.
வேகத்தடை இல்லை
கோவை சத்தி ரோடு பாரதி நகரில் இருந்து கணபதி மாநகர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் கணபதி மாநகருக்கு இடதுபுறம் திரும்பும் பகுதியில் தனியார் ஆஸ்பத்திரி அருகே 4 வழி சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பில் காந்திமாநகர் பகுதியில் இருந்து வரும் சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் அந்த சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வேகமாக வருவதால் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. எனவே அதிகாரிகள் அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்.
சந்தோஷமூர்த்தி, காந்திமாநகர்.
ஒளிராத தெருவிளக்குகள்
கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள ராக்லேண்ட் தெரு பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தெரு விளக்குகள் ஒளிராமல் இருக்கிறது. இதனால் இரவில் இங்கு இருள் சூழ்ந்து காணப்படுவதால் இந்த பகுதியை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் நடந்து செல்வதற்கு அச்சப்படுகின்றனர். இது சம்பந்தமாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து ஒளிராத தெருவிளக்குகளை சரிசெய்து ஒளிர செய்ய வேண்டும்.
பார்த்தீபன், கூடலூர்.
சிதறி கிடக்கும் குப்பைகள்
பொள்ளாச்சி பழையபஸ் நிலையத்தில் பயணிகள் வேர்கடலை, தர்பூசணி போன்ற திண்பண்டம் சாப்பிட்டபின் தூக்கி போடும் பேப்பர்கள், பிளாஸ்டிக் பைகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. அவை காற்று வீசும்போது பறந்து அங்கு பஸ்சுக்காக காத்திருப்பவர்கள் மீது படுகிறது. இதனால் இங்கு வந்து செல்லும் பயணிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்ைக எடுத்து இங்கு சிதறி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
பாலகிருஷ்ணன், பொள்ளாச்சி.
சாலையின் நடுவே மின்கம்பம்
கோவை பீளமேட்டில் இருந்து சவுரிபாளையம் செல்லும் ரோட்டில் ஒரு பழமுதிர் நிலையம் உள்ளது. இதன் அருகே சாலையின் நடுவில் மின்கம்பம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
ஜோசப், சவுரிபாளையம்.
வேகத்தடைகள் வேண்டும்
கோவை பாலக்காடு மெயின் ரோடு கோவை புதூர் பிரிவில் இருந்து பேரூர் செல்லும் வழியில் ஏராளமான வேகத்தடைகள் இருந்தன. இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் மெதுவாக சென்று வந்தன. இதன் காரணமாக விபத்துகள் ஏற்படுவது தடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அங்கு 16 வேகத்தடைகள் அகற்றப்பட்டு உள்ளதால் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து இந்த சாலையில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.
திருநாவுக்கரசு, கோவைப்புதூர்.
மேம்பாலத்தில் புகைப்படம்
கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் இரவு நேரத்தில் இளைஞர்கள் சிலர் சாலையில் அமர்ந்து புகைப்படம் எடுத்து வருகிறார்கள். சில நேரத்தில் அவர்கள் ஹாயாக நடுரோட்டில் படுத்துக்கொண்டு புகைப்படம் எடுக்கிறார்கள். இதனால் அங்கு விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே போலீசார் தக்க நடவடிக்கை எடுத்து இரவு நேரத்தில் இந்த மேம்பாலத்தில் அடிக்கடி ரோந்து செல்வதுடன், மேம்பாலத்தில் இதுபோன்ற செயலில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொன்சாமி, காந்திபுரம்.
போக்குவரத்து நெரிசல்
கோவை சத்தி ரோட்டில் கணபதி மூர் மார்க்கெட் பகுதியில் ஆவாரம்பாளையம் ரோடு உள்ளது. இந்த சாலையில் இருந்து தினமும் ஏராளமான வாகனங்கள் சத்தி ரோட்டுக்கு செல்கிறது. ஆனால் இந்த பிரிவில் சில நேரத்தில் மட்டுமே போலீசார் நின்று போக்குவரத்தை சரிசெய்கிறார்கள். சில நேரத்தில் அங்கு போலீசார் நிற்பது இல்லை. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதுடன், விபத்துகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமரேசன், கணபதி.
பழுதான சாலை
கோவை அவினாசி சாலையில் சென்னி ஆண்டவர் கோவில் அருகே மின்பகிர்மான நிலையம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை கடந்த 10 ஆண்டாக பழுதாகி குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயத்துடன் தப்பிக்கும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
சிவக்குமார், கருமத்தம்பட்டி.
Related Tags :
Next Story






