அனைத்து மாநிலங்களிலும் இரு மொழி கொள்கை மட்டுமே சாத்தியம் - அன்புமணி ராமதாஸ் பேட்டி

பாட்டாளி மக்கள் கட்சியின் காஞ்சீபுரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் காஞ்சீபுரம் அண்ணா அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ம.க. மாநில இளைஞர் சங்க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:-
காஞ்சீபுரம்,
தமிழகத்தில் 55 ஆண்டுகள் மாறி மாறி ஆட்சி செய்தது போதும். புதிய கட்சி ஆட்சியமைக்க வேண்டும். மக்கள் நம் மீது நல்ல நம்பிக்கையை வைத்துள்ளனர். காஞ்சீபுரம் மாவட்டத்தில் மக்கள் பிரச்சினை அதிகமாக உள்ளது. மாதத்திற்க்கு இரு முறை போராட்டம் நடத்தப்படும். பாலாற்றில் தற்போதும் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு 5 கிலோ மீட்டர் தூரத்திற்க்கும் தடுப்பணை கட்ட வேண்டும்.
பாட்டாளி மக்கள் கட்சியில் சம்பாதிக்க வேண்டும் என்றால் யாரும் பொறுப்புக்கு வர வேண்டாம், சேவை செய்ய இருந்தால் மட்டுமே கட்சிக்கு வர வேண்டும். யார் மீது புகார் வந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கபடும்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு உறுதியாக செயல்படுத்தப்படும். ஒரு வாரத்துக்கு ஒரு போராட்டம் நடத்த வேண்டும். அண்ணா பிறந்த மண் காஞ்சீபுரம். மதுவை அண்ணா ஏற்று கொள்வில்லை, அண்ணா பெயர் வைத்து கட்சி நடத்தும் கட்சிகள் மதுவை விற்பனை செய்து வருகின்றன.
இ்வ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் இந்தி திணிப்பு கண்டனத்திற்குரியது, எந்த மொழியையும் திணிக்க கூடாது, அது ஒற்றுமையை உருவாக்காது.
பா.ஜ.க. ஆளும் உத்தரபிரதேசத்தில் இந்தி, ஆங்கிலம் தவிர 3-வது மொழியாக தமிழை கொண்டு வர முடியுமா. அனைத்து மாநிலங்களிலும் இரு மொழி கொள்கை மட்டுமே சாத்தியமாகும், 3-வது மொழி சாத்தியமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் ஏ.கே.மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






