அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆஸ்பத்திரி - கலெக்டர் ஆய்வு

காரப்பேட்டை அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆஸ்பத்திரியில் மிக பெரிய அளவிலான புற்றுநோய்க்கான மேன்மைமிகு மைய கட்டிடம் கட்டும் பணியை கலெக்டர் டாக்டர் ஆர்த்தி ஆய்வு செய்தார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தை அடுத்த காரப்பேட்டை அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆஸ்பத்திரியில் ரூ.118 கோடியே 46 லட்சம் செலவில் மிக பெரிய அளவிலான புற்றுநோய்க்கான மேன்மைமிகு மைய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி பார்வையிட்டு நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் கட்டிட பணி முடிவடையும் போது ஏற்கனவே அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆஸ்பத்திரியில் 290 படுக்கைகளுடன் இந்த ஆஸ்பத்திரி சிறப்பாக செயலாற்றி கொண்டிருக்கிறது. கூடுதலாக அதிநவீன வசதிகளுடன் கூடிய மேன்மைமிகு மைய கட்டிடத்தில் 500 புதிய படுக்கைகளும் உருவாக இருக்கிறது. இந்த கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்போது கூடுதல் படுக்கைகள் கொண்ட மிகபெரிய ஆஸ்பத்திரியாக விரிவாக்கப்படும்.
மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரியை விரிவுபடுத்துவதற்கு கூடுதலாக ரூ.100 கோடி ஒதுக்கப்படும் எனவும், தன்னாட்சி அதிகாரம் பெற்ற உயர் தர ஆஸ்பத்திரியாக மேலும் தரம் உயர்த்தப்படும் எனவும் அறிவித்து இருந்தார்.
மேலும் தூய்மை ஆஸ்பத்திரி இயக்கம் சார்பில் நடைபெற்றுவரும் ஆஸ்பத்திரி வளாக தூய்மை பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு ஆஸ்பத்திரி வளாகத்தை தூய்மையாக வைத்துகொள்ளவும் அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து தொண்டு நிறுவனத்தின் மூலம் ரூ.28 லட்சம் மதிப்பிலான அவசர கால சிகிச்சை வாகனம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தியிடம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டது.
இந்த ஆய்வின் போது அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆஸ்பத்திரி இயக்குனர் சீனிவாசன், உள்ளுறை மருத்துவ அலுவலர் மனோகரன் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story






