செம்மஞ்சேரியில் பஸ் டிரைவரை தாக்கிய 2 பேரை கைது செய்யக்கோரி மறியல்


செம்மஞ்சேரியில் பஸ் டிரைவரை தாக்கிய 2 பேரை கைது செய்யக்கோரி மறியல்
x
தினத்தந்தி 17 April 2022 2:59 PM IST (Updated: 17 April 2022 2:59 PM IST)
t-max-icont-min-icon

செம்மஞ்சேரியில் பஸ் டிரைவரை தாக்கிய 2 பேரை கைது செய்யக்கோரி மறியல் போராட்டம் நடந்தது.

சோழிங்கநல்லூர்,

செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு முகப்பு வாயிலில் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சில் ஏறிய 2 பேர் டிரைவர் விஜயகுமார் என்பவரை தாக்கிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு இருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுவிட்டனர். இதனால் காயமடைந்த அரசு பஸ் டிரைவர் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டி பஸ்சை அதே இடத்தில் சாலையின் நடுவே நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

அரசு பஸ் டிரைவரை தாக்கப்பட்டதை அறிந்த சக அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் பயணிகளுடன் பஸ்சை சாலையில் நிறுத்திவிட்டு சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த செம்மஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் வெகு நேரமாக அங்கு கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போராட்டத்தை கைவிட்டுவிட்டு பஸ்சை இயக்கும்படி போலீசார் கூறினர்.

பின்னர் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதால் போலீசாரின் பேச்சுவார்த்தையில் தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் அடிப்படையில் சாலையில் நிறுத்திய பஸ்சை இயக்க ஆரம்பித்தனர். பின்னர் எந்த ஒரு தவறும் செய்யாத அரசு பஸ் டிரைவரை தாக்கியவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செம்மஞ்சேரி போலீசாரிடம் புகார் அளித்தனர்.
1 More update

Next Story