வாலாங்குளத்தில் ஆய்வுக்கு சென்றபோது வழுக்கி விழுந்த மாநகராட்சி பணிகள் குழு தலைவர்

வாலாங்குளத்தில் ஆய்வுக்கு சென்றபோது மாநகராட்சி பணிகள் குழு தலைவர் வழுக்கி விழுந்ததால் கை முறிந்தது. அவருக்கு தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை
வாலாங்குளத்தில் ஆய்வுக்கு சென்றபோது மாநகராட்சி பணிகள் குழு தலைவர் வழுக்கி விழுந்ததால் கை முறிந்தது. அவருக்கு தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குளத்தில் ஆய்வு
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை வாலாங்குளம் புனரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டு உள்ளது. அத்துடன் அங்கு குளத்துக்குள் சென்றுவர நடைபாதையும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இங்கு சுற்றுலா பயணிகளை கவர படகு சவாரி விட திட்டமிடப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, பணிகள் குழு தலைவர் சாந்தி முருகேசன், நிதிக்குழு தலைவர் முபசீரா மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் அங்கு சென்றனர். அப்போது குளத்தின் நடுவில் மிதவை நடைபாதையில் நடந்து சென்று ஆய்வு செய்தனர்.
வழுக்கி விழுந்தார்
பின்னர் அவர்கள் அங்குள்ள தடுப்புகள் வழியாக திரும்பி வந்தனர். அப்போது திடீரென்று பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன் கால் வழுக்கி கீழே விழுந்தார். அப்போது அவர் தனது இடதுகையை கீழே ஊன்றியதால் அந்த கையில் முறிவு ஏற்பட்டது.
உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர் தவறி விழுந்ததால் மண்டல தலைவர் உள்பட அதிகாரிகள், கவுன்சிலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தக்க நடவடிக்கை
பின்னர் அவர்கள், ஆய்வு பணியை பாதியிலேயே முடித்துவிட்டு திரும்பினார்கள். சாய்வுதளம் சரியாக இல்லாததால் வழுக்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனால்தான் அவர் வழுக்கி கீழே விழுந்ததாகவும், மறு புறத்திலும் இதே நிலை இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
சாய்வு தளத்தை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மண்டல தலைவர் மீனாலோகு தெரிவித்தார்.
Related Tags :
Next Story






