ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
கோவை
ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
ஈஸ்டர் பண்டிகை
உலக மக்களின் பாவங்களை போக்க இந்த உலகத்தில் மனிதனாக பிறந்த இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்டு, 3-ம் நாளில் உயிர்த் தெழுந்ததாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது.
அதன்படி இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளியாக கடைபிடித்து வரும் கிறிஸ்தவர்கள், அவர் 3-ம் நாளில் உயிர்த்தெழுந்ததை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள்.
அதன்படி ஈஸ்டர் பண்டிகை என்பதால் கிறிஸ்தவர்கள் சிறப்பாக கொண்டாடினார்கள். அத்துடன் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
அதுபோன்று கோவையில் உள்ள ஆலயங்களில் பிரார்த்தனை மற்றும் திருப்பலிகளும் நடைபெற்றன.
ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
கோவை டவுன்ஹாலில் உள்ள புனித மைக்கேல் அதிதூதர் ஆலயத்தில் மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அதுபோன்று காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயம், காந்திபுரம் புனித அன்னை ஆலயம், புலியகுளம் அந்தோணியார் ஆலயம், ராமநாதபுரம் உயிர்த்த இயேசு ஆண்டவர் ஆலயம், போத்தனூர் புனித சூசையப்பர் ஆலயம், கார்மல்நகர் கார்மல் அன்னை ஆலயம், கோவைப்புதூர் குழந்தை ஏசுஆலயம், கோவை ஆர்.எஸ்.புரம் புனித அருளானந்தர் ஆலயம் உள்பட பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
வாழ்த்துக்களை பரிமாறினர்
மேலும் கோவை திருச்சி ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம், ரேஸ்கோர்சில் உள்ள ஆல்சோல்ஸ் ஆலயம், உப்பிலிபாளையம் சிக்னலில் உள்ள சி.எஸ்.ஐ. இமானுவேல் ஆலயம் உள்பட கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
இந்த பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்து டன் கலந்து கொண்டு ஈஸ்டர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
மேலும் 40 நாட்கள் நோன்பு இருந்த சிலர் அதன் மூலம் சேமித்த நிதியை ஏழைகளுக்கு மருத்துவ சிகிச்சைக்காக மற்றும் கல்வி வளர்ச்சிக்காக கொடுத்து உதவினர்.
Related Tags :
Next Story






