பெண் தொழிலாளிக்கு எலி காய்ச்சல்


பெண் தொழிலாளிக்கு எலி காய்ச்சல்
x
தினத்தந்தி 20 April 2022 11:08 PM IST (Updated: 20 April 2022 11:08 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் பெண் தொழிலாளிக்கு எலி காய்ச்சல் ஏற்பட்டது. இதையொட்டி குடியிருப்பு பகுதியில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.

வால்பாறை

வால்பாறையில் பெண் தொழிலாளிக்கு எலி காய்ச்சல் ஏற்பட்டது. இதையொட்டி குடியிருப்பு பகுதியில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. 

பெண் தொழிலாளி

கோவை மாவட்டம் வால்பாைற அருகே உள்ள ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் 36 வயது பெண் தொழிலாளி வேலை பார்த்து வந்தார். அவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டது. 

அதற்காக, அந்த தேயிலை தோட்ட நிர்வாக தலைமை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து வால்பாறை அரசு ஆஸ்பத்திரியிலும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் காய்ச்சல் குணமாகவில்லை. 

எலி காய்ச்சல்

இதையடுத்து பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவருக்கு எலி காய்ச்சல் பாதிப்பு உள்ளதை உறுதி செய்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் வால்பாறை நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் உத்தரவின்பேரில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ், அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் கவின் தலைமையில் 

நகராட்சி களப்பணியாளர் பாலசுப்பிரமணி மேற்பார்வையில் துப்புரவு பணியாளர்கள் சம்பந்தப்பட்ட தேயிலை தோட்ட நிர்வாகத்தின் உதவியுடன் பவிதாகுமாரி தங்கியிருந்த குடியிருப்பு பகுதி மற்றும் பிற தொழிலாளர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதியில் கிருமிநாசினி தெளித்தனர். 

மருத்துவ முகாம்

தொடர்ந்து கொசு மருந்து அடித்து, சுகாதார பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர். மேலும் அங்குள்ள தண்ணீர் தொட்டிகளை பார்வையிட்டு கிருமி நாசினி தெளித்து, கழிப்பிட தொட்டிகளின் குழாய்களுக்கு வலைகள் கட்டப்பட்டது. தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் உள்ள எலி பொந்துகள் அடைக்கப்பட்டது. எலி காய்ச்சல் குறித்து தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ குழுவினர் சார்பில் நாளை(வியாழக்கிழமை) சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.

1 More update

Next Story