கோவையில் செலவுக்கு பணம் தராததால் கள்ளக்காதலி வீட்டு வாசலில் படுத்திருந்த முதியவரை, அவருடைய மகன் கொலை செய்தார்
கோவையில் செலவுக்கு பணம் தராததால் கள்ளக்காதலி வீட்டு வாசலில் படுத்திருந்த முதியவரை, அவருடைய மகன் கொலை செய்தார்
கோவை
கோவையில் செலவுக்கு பணம் தராததால் கள்ளக்காதலி வீட்டு வாசலில் படுத்திருந்த முதியவரை, அவருடைய மகன் கொலை செய்தார்.
இந்த குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது
ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்
கோவை புலியகுளம் நியூ குடிசை மாற்றுவாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 61).
இவர் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவருடைய மனைவி வசந்தா. இவர்களுக்கு சுரேஷ் (39) என்ற மகனும், வனிதா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் சிங்காநல்லூர் அருகே எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் வசித்து வருகிறார்கள்.
பெயிண்டரான சுரேசுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
கள்ளக்காதல்
கருப்பசாமிக்கு, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு புலியகுளத்தை சேர்ந்த கணவரை இழந்த 51 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
அந்த பெண், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகி றார்.
அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.
இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக வசந்தா கருப்பசாமியை பிரிந்து மகனுடன் எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் வசித்து வருகிறார்.
ரூ.6 லட்சம்
இந்த நிலையில், கருப்பசாமி பணியில் இருந்து ஓய்வு பெற்ற போது கிடைத்த ஓய்வூதிய பண பலன் ரூ.6 லட்சத்தை கள்ளக்காதலியிடம் கொடுத்த தாக கூறப்படுகிறது.
இதை அறிந்த அவரது மகன் சுரேஷ்,கருப்பசாமியை அடிக்கடி நேரில் சந்தித்து தான் கஷ்டப் படுவதால் செலவுக்கு பணம் தர வேண்டும் என்று கேட்டார்.
ஆனால் கருப்பசாமி பணம் கொடுக்க மறுத்ததால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவு கருப்பசாமி அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித் தார். போதை தலைக்கேறிய நிலையில் தனது கள்ளக்காதலி வீட்டு வாசலில் கருப்பசாமி படுத்து இருந்தார்.
நள்ளிரவு 12 மணியளவில் சுரேஷ் தனது தந்தை கருப்பசாமியிடம் பணம் கேட்பதற்காக வந்தார்.
அவர், அங்கு படுத்து தூங்கி கொண்டு இருந்த கருப்பசாமியை எழுப்பி அங்குள்ள கருப்பராயன் கோவில் அருகே அழைத்து சென்றார்.
கழுத்தை அறுத்து கொலை
அங்கு வைத்து பணம் கொடுக்கும்படி சுரேஷ் கேட்டதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து கருப்பசாமியின் கழுத்தை அறுத்தார்.
இதனால் வலிதாங்க முடியாமல் தப்பி ஓடிய கருப்பசாமி சிறிது தூரம் சென்றதும் கீழே விழுந்து சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே சுரேஷ் தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story