கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பொக்லைன் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்


கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பொக்லைன் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்
x
தினத்தந்தி 23 April 2022 7:44 PM IST (Updated: 23 April 2022 7:44 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பொக்லைன் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்


கோவை

கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பொக்லைன் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொக்லைன் உரிமையாளர்கள்

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொக்லைன் உரிமையாளர்கள் கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தினார்கள்.


இது குறித்து பொக்லைன் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சந்திரசேகர் கூறியதாவது

டீசல், வாகனத்திற்கான காப்பீடு, சாலை வரி, வாகன உதிரி பாகங்கள் விலை உயர்வால் எங்கள் தொழில் மிகவும் நலிவ டைந்து உள்ளது. 

எனவே பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும்.

வேலை நிறுத்த போராட்டம்

காப்பீடு மற்றும் சாலை வரி கட்டணத்தை குறைக்க வேண்டும்,

 உதிரிபாகங்கள் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 21 முதல் நேற்று வரை 3 நாட்கள் அடையாள வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டோம்.

ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வாங்கிய வங்கிக்கடனை செலுத்த முடியாமல் தவித்து வருகிறோம்.

 இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் கோவை மாவட்டத்தில் 1,500 பொக்லைன் எந்திரங்கள் இயங்கவில்லை. 

இதனால் 2 ஆயிரத்து 500 தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் நிலம், கட்டிடம் மற்றும் விவசாயம் தொடர்பான பணிகள் பாதிக்கப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

வேலை நிறுத்தம் காரணமாக கோவை கோல்டுவின்ஸ் பகுதியில்  ஏராளமான பொக்லைன் எந்திரங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.

Next Story