மாதாந்திர மாமூலாக வசூலித்த ரூ.28 லட்சத்து 35 ஆயிரம் லஞ்சப்பணத்துடன் கோவை வட்டார போக்குவரத்து இணை கமிஷனர் உமாசக்தி சிக்கினார். அவர் உள்பட 2 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்


மாதாந்திர மாமூலாக வசூலித்த ரூ.28 லட்சத்து 35 ஆயிரம் லஞ்சப்பணத்துடன் கோவை வட்டார போக்குவரத்து இணை கமிஷனர் உமாசக்தி சிக்கினார். அவர் உள்பட 2 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்
x
தினத்தந்தி 23 April 2022 8:26 PM IST (Updated: 23 April 2022 8:26 PM IST)
t-max-icont-min-icon

மாதாந்திர மாமூலாக வசூலித்த ரூ.28 லட்சத்து 35 ஆயிரம் லஞ்சப்பணத்துடன் கோவை வட்டார போக்குவரத்து இணை கமிஷனர் உமாசக்தி சிக்கினார். அவர் உள்பட 2 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்


கோவை

மாதாந்திர மாமூலாக வசூலித்த ரூ.28 லட்சத்து 35 ஆயிரம் லஞ்சப்பணத்துடன் கோவை வட்டார போக்குவரத்து இணை கமிஷனர் உமாசக்தி சிக்கினார். அவர் உள்பட 2 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மாதாந்திர மாமூல் வசூல்

கோவை மண்டல வட்டார போக்குவரத்து இணை கமிஷனர் அலுவலகம் பாலசுந்தரம் ரோட்டில் உள்ளது. 

இங்கு போக்குவ ரத்து இணை கமிஷனராக உமாசக்தி பணியாற்றி வந்தார். அவரது கட்டுப்பாட்டில், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்கள் வருகிறது.

ஆம்னி பஸ் அதிபர்கள், போக்குவரத்து பயிற்சி மைய உரிமையா ளர்கள், சுங்கச்சாவடி அதிகாரிகள் உள்ளிட்டவர்களிடம் இணை கமிஷனர் உமாசக்தி, மாதம் தோறும் மாமூல் வசூலிப்பதாக கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் துணை சூப்பிரண்டு திவ்யாவுக்கு தகவல் கிடைத்தது. 

போலீசார் சோதனை

இந்த நிலையில், நேற்று பகல் 11 மணியளவில் பல்வேறு நபர்களிடம் இருந்து லஞ்சப்பணத்தை வசூலித்து கொண்டு கோவை சவுரிபாளையம் கிருஷ்ணா வீதி வழியாக இணை கமிஷனர் உமாசக்தி காரில் செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே லஞ்சஒழிப்பு போலீஸ் தனிப்படையினர் விரைந்து சென்று உமாசக்தியின் காரை தடுத்து நிறுத்தி அதிரடி சோதனை நடத்தினார்கள்.

 இதை பார்த்து இணை கமிஷனர் உமாசக்தி, லஞ்சப் பணத்தை பெற்றுக்கொடுக்கும் உதவியாளராக ஓய்வு பெற்ற உதவியாளர் செல்வராஜ் என்பவரும் காரில் இருந்தனர். 

ரூ.28 லட்சத்து 35 ஆயிரம் லஞ்சம்

அவர்கள் போலீசார் நடத்திய சோதனையால் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சோதனையில் காருக்குள் கத்தை, கத்தையாக ரூபாய் நோட்டுக்கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. 

உடனே காருடன் உமாசக்தி, செல்வராஜ் ஆகியோரை வட்டார போக்குவரத்து இணை கமிஷனர் அலுவலகத்துக்கு போலீசார் அழைத்து கொண்டு வந்து விசாரணை நடத்தினார்கள். 

மேலும் காரில் இருந்து மொத்தம் ரூ.28 லட்சத்து 35 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. அந்த பணத்துக்கான உரிய கணக்கு விவரங்க ளை கேட்டு போலீசார் விசாரித்தனர். 

அதற்கு உரிய பதில் அளிக்க முடியாமல் உமாசக்தி திணறியதாக தெரிகிறது.

 மேலும் காரில் இருந்து கைப்பற்றப்பட்டது லஞ்சப்பணம்தான் என்று உமாசக்தி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

2 பேர் மீது வழக்கு

இதைத்தொடர்ந்து உமாசக்தி, ஓய்வுபெற்ற உதவியாளர் செல்வராஜ் ஆகிய 2 பேர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. 

கோவையில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை பலமுறை நடைபெற்று உள்ளது. 

ஆனால் ரூ.28 லட்சத்து 35 ஆயிரம் அளவுக்கு லஞ்சப்பணம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்று லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

லஞ்சப் பணத்துடன் சிக்கிய இணை கமிஷனர் உமாசக்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில் அவர் மீது துறை ரீதியாக வட்டார போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.


Next Story