கிணத்துக்கடவில் கிராம ஊராட்சி செயலாளர் சங்க மாநாடு


கிணத்துக்கடவில் கிராம ஊராட்சி செயலாளர் சங்க மாநாடு
x
தினத்தந்தி 23 April 2022 8:52 PM IST (Updated: 23 April 2022 8:52 PM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவில் கிராம ஊராட்சி செயலாளர் சங்க மாநாடு நடந்தது.

கிணத்துக்கடவு

தமிழ்நாடு கிராம ஊராட்சி செயலாளர் சங்கத்தின் கொங்கு மண்டல மாநாடு கிணத்துக்கடவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு கிராம ஊராட்சி செயலாளர் சங்க மண்டல தலைவர் தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். மாநாட்டில் தமிழ்நாடு கிராம ஊராட்சி செயலாளர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் சாஜி, மாநில பொதுச் செயலாளர் தர்மராஜா, மாநில பொருளாளர் செந்தில்குமார், மண்டல துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பிரதிநிதி ஜெயக்குமார் வரவேற்று பேசினார். இதில் தமிழ்நாடு கிராம ஊராட்சி செயலாளர் சங்க மாநில தலைவர் வாசுதேவன் கலந்து கொண்டு பேசினார். 
கூட்டத்தில், ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களாக 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு தேர்வு நிலை என்றும் 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு சிறப்பு நிலை எனவும் வழங்கவேண்டும். அரசாணை எண் 171-ல் உள்ள குறைபாடுகளை களைந்து அரசு ஊழியர்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும் ஊராட்சி செயலாளர்களுக்கு வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் உள்ள ஊராட்சி செயலர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் முதுநிலை பட்டியல் வெளியிட்டு அதன் அடிப்படையில் 20 சதவீத இளநிலை உதவியாளர் பணியிடத்தில் பணி வழங்க வேண்டும். 1996- முதல் 2004-ம் ஆண்டு வரை உள்ள ஊதிய நிலுவை தொகை வழங்க வேண்டும் என்பட உள்பட உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story