வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் காட்டெருமைகள் உலா


வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் காட்டெருமைகள் உலா
x
தினத்தந்தி 23 April 2022 8:55 PM IST (Updated: 23 April 2022 8:55 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் காட்டெருமைகள் உலா வருகின்றன. அதனால் கவனமுடன் செல்ல தொழிலாளர்களுக்கு வனத்துறை வேண்டுகோள் விடுத்து உள்ளது.

வால்பாறை

வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் காட்டெருமைகள் உலா வருகின்றன. அதனால் கவனமுடன் செல்ல தொழிலாளர்களுக்கு வனத்துறை வேண்டுகோள் விடுத்து உள்ளது.

காட்டெருமைகள் உலா

வால்பாறை பகுதியில் தற்போது விட்டு விட்டு கோடைமழை பெய்து கொண்டிருப்பதால் தேயிலை தோட்ட பகுதிகள் தேயிலை தோட்டங்களை ஒட்டிய இடங்கள் பசுமையாக மாறிவிட்டன. இதனால் தேயிலை தோட்டங்களுக்கு இடையில் இருக்கும் புல்வெளி பகுதியில் வனப்பகுதிக்குள்ளிருந்து வரக்கூடிய காட்டெருமைகள் மேய்ந்து வருவதோடு உலா வந்த வண்ணம் உள்ளது. இவ்வாறு மேய்ச்சலுக்கு வரும் காட்டெருமைகள் தேயிலை தோட்ட பகுதிகளுக்குள்ளேயே படுத்து ஒய்வெடுத்து வருகின்றன. இந்த சமயத்தில் அந்த தேயிலை தோட்ட பகுதிக்கு தேயிலை இலை பறிக்கும் பணிக்காக தொழிலாளர்கள் செல்லும் போது தேயிலை செடிகளுக்கு மத்தியில் படுத்து ஒய்வெடுத்துக் கொண்டிருக்கும் காட்டெருமைகள் திடீரென குதித்து எழுந்து ஒட முயற்சிக்கும் அப்போது தொழிலாளர்கள் பயந்து ஒடி கீழே விழுந்து விடுவதற்கும் காட்டெருமைகள் தாக்குதலுக்கும் ஆளாக வேண்டிய சூழ்நிலை ஏற்படும். 

கண்காணிக்க வேண்டும்

எனவே தேயிலை தோட்ட அதிகாரிகள் தேயிலை தோட்டத்திற்கு தொழிலாளர்களை பணிக்கு அனுப்புவதற்கு முன் தேயிலை தோட்டங்களுக்குள் காட்டெருமைகள் படுத்துள்ளதா? என்பதை கண்காணித்து தொழிலாளர்களை பணிக்கு அனுப்ப வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது:- வால்பாறையில் தற்ப்போது உள்ள சீதோஷ்ண நிலையை பொறுத்த காட்டெருமைகள் அடிக்கடி கிராமப்பகுதி மற்றும் தேயிலை தோட்டத்தில் அடிக்கடி உலா வருகின்றனர். எனவே தேயிலை தோட்டத்திற்குள் காட்டெருமைகள் படுத்திருந்தால் பணிக்கு செல்வதற்கு முன் கூச்சலிட்டு அல்லது தேயிலை செடிகளை அசைத்தோ சத்தம் உண்டாக்கினால் காட்டெருமைகள் ஒடி விடும். அதன் பின்னர் பணிபுரிய செய்யலாம் சற்று கவனத்துடன் இருந்தால் வனவிலங்குகளால் ஏற்படும் விபத்தை தடுக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story