வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை தி.மு.க. கவுன்சிலர் அகற்றினார். இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் 63 பேர் கைது செய்யப்பட்டனர்
வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை தி.மு.க. கவுன்சிலர் அகற்றினார். இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் 63 பேர் கைது செய்யப்பட்டனர்
போத்தனூர்
வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை தி.மு.க. கவுன்சிலர் அகற்றினார். இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் 63 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிரதமர் மோடியின் புகைப்படம்
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்று பா.ஜ.க.வினர் வலியு றுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோவையை அடுத்த வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் அறையில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை பா.ஜ.க.வினர் நேற்று மாட்டினர்.
இதையடுத்து வெள்ளலூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர் கனக ராஜ், செயல் அலுவலர் அறையில் மாட்டி இருந்த பிரதமர் மோடி உருவப்படத்தை கழற்றி அப்புறப்படுத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பா.ஜ.க.வினர் கைது
இதைத்தொடர்ந்து வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்த உடன் பா.ஜ.க.வினர் வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் தி.மு.க. வார்டு உறுப்பினர் கனகராஜை கண்டித்து கோஷமிட்டனர்.
உடனே போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 63 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்
Related Tags :
Next Story