பயிர் காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம்- நாளை முதல் நடக்கிறது


பயிர் காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம்- நாளை முதல் நடக்கிறது
x
தினத்தந்தி 24 April 2022 2:02 PM IST (Updated: 24 April 2022 2:02 PM IST)
t-max-icont-min-icon

பயிர் காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம் நாளை முதல் நடக்கிறது. இதில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம்,

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பிரதம மந்திரி கவுரவ நிதி திட்ட பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டை பெற்று வழங்கும் நோக்கத்திலும் நாளை (திங்கட்கிழமை) முதல் மே 1 வரை அதிவிரைவு விழிப்புணர்வு முகாம் நடத்தப்படவுள்ளது.

கிராம அளவில் நடைபெறவுள்ள இந்த முகாம்களில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்கள், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு மைய அதிகாரிகள், இந்திய வேளாண் காப்பீடு நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள், களப்பணியாளர்கள் மற்றும் இ-சேவை மைய பணியாளர்கள் கலந்து கொண்டு பயிர் காப்பீடு திட்டத்தின் அவசியம், பயிர் காப்பீடு செய்வதால் ஏற்படும் நன்மைகள் காப்பீடு செய்யும் முறைகள், பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்படும் தொகை எவ்வளவு? போன்றவை குறித்த விளக்கத்தை ஸ்ரீபெரும்புதூர் வட்டாரத்தில் மேல்மதுரமங்கலம், ஸ்ரீபெரும்புதூர், கோட்டூர், சந்தவேலூர், பிள்ளைப்பாக்கம் மற்றும் காந்தூர் ஆகிய கிராமங்களில் முறையே வருகிற 25, 26, 27, 28, 29 மற்றும் 30-ந்தேதிகளில் நடத்தப்படவுள்ளது.

வாலாஜாபாத் வட்டாரத்தில் அத்திவாக்கம், வாலாஜாபாத், புத்தகரம், அகரம், கோவிந்தவாடி மற்றும் பரந்தூர் ஆகிய கிராமங்களில் முறையே வருகிற 25, 26, 27, 28, 29 மற்றும் 30-ந்தேதிகளில் நடத்தப்படவுள்ளது.

படப்பை வட்டாரத்தில் சோமங்கலம், படப்பை, வட்டம்பாக்கம், பழந்தண்டலம், ஒரத்தூர் மற்றும் மலைப்பட்டு ஆகிய கிராமங்களில் முறையே வருகிற 25, 26, 27, 28, 29 மற்றும் 30-ந்தேதிகளில் நடத்தப்படவுள்ளது.

சிறுகாவேரிப்பாக்கம் வட்டாரத்தில் தாமல், சிறுகாவேரிப்பாக்கம், அவளூர், விப்பேடு, இளையனார் வேலூர் மற்றும் கீழ்க்கதிர்பூர் ஆகிய கிராமங்களில் வருகிற 25, 26, 27, 28, 29 மற்றும் 30-ந்தேதிகளில் நடத்தப்படவுள்ளது.

உத்திரமேரூர் வட்டாரத்தில் மருத்துவம்பாடி, உத்திரமேரூர், அன்னாத்தூர், இளநகர், பெருங்கோழி மற்றும் மலையாங்குளம் ஆகிய கிராமங்களில் முறையே வருகிற 25, 26, 27, 28, 29 மற்றும் 30-ந்தேதிகளில் நடத்தப்படவுள்ளது. மேலும் அடுத்த மாதம் 1-ந்தேதி அன்று அனைத்து கிராம பஞ்சாயத்துக்களிலும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படவுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 More update

Next Story