கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி வாலிபர் சாவு


கும்மிடிப்பூண்டி  அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி வாலிபர் சாவு
x

மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.

வாலிபர் சாவு

சென்னை செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் பகுதியில் வசித்து வந்தவர் அஜீத் துரை (வயது 23). இவர் நேற்று செங்குன்றத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் கும்மிடிப்பூண்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். கவரைப்பேட்டை அடுத்த போரக்ஸ் அருகே மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தபோது, அதே திசையில் வந்த டிப்பர் லாரி ஒன்று மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அஜீத் துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையில், கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றோரு சம்பவம்

இதே போல் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் கிராமம் இந்திரா நகரில் வசித்து வந்தவர் குணசேகர் (வயது 29). இவர் கடந்த 19-ந்தேதியன்று தனது உறவினர் மகனான முகேஷ் (7) என்பவரை அழைத்துக்கொண்டு வேலையின் காரணமாக திருவள்ளூர் சென்றார். பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். தண்டலம் அருகே வரும்போது சாலையின் குறுக்கே நாய் வந்தது.

இதை தொடர்ந்து அவர் உடனடியாக பிரேக் பிடித்தார். இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறிய இருவரும் கீழே விழுந்தனர். இதில் குணசேகர் படுகாயம் அடைந்தார். சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த குணசேகர் நேற்று சிகிச்சை முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடம்பத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story