செலவுக்கு பணம் தராத ஆத்திரத்தில் தந்தையை கொன்ற பெயிண்டர் கைது செய்யப்பட்டார்


செலவுக்கு பணம் தராத ஆத்திரத்தில் தந்தையை கொன்ற பெயிண்டர் கைது செய்யப்பட்டார்
x
தினத்தந்தி 24 April 2022 6:41 PM IST (Updated: 24 April 2022 6:41 PM IST)
t-max-icont-min-icon

செலவுக்கு பணம் தராத ஆத்திரத்தில் தந்தையை கொன்ற பெயிண்டர் கைது செய்யப்பட்டார்


கோவை

செலவுக்கு பணம் தராத ஆத்திரத்தில் தந்தையை கொன்ற பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது

கள்ளக்காதல்

கோவை புலியகுளம் நியூ குடி
சை மாற்றுவாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 61). இவர் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

இவருடைய மனைவி வசந்தா. இவர்களுக்கு சுரேஷ் (39) என்ற மகனும், வனிதா என்ற மகளும் உள்ளனர். 

சுரேஷ் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். 

இந்த நிலையில் கணவரை இழந்த 51 வயது பெண்ணுடன் கருப்பசாமிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. 

இதை அறிந்த அவரது மனைவி கருப்பசாமியை பிரிந்து தனது மகனுடன் எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் வசித்து வந்தார்.

ஓய்வூதிய பணம்

கருப்பசாமி பணியில் இருந்து ஓய்வு பெற்ற போது கிடைத்த ஓய்வூதிய பணத்தை கள்ளக்காதலியிடம் கொடுத்ததாக கூறப்படு கிறது. 

இதை அறிந்த சுரேஷ் தனது தந்தையிடம் செலவுக்கு பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்ததால் அவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த 22-ந் தேதி இரவு 12 மணி அளவில் கருப்பசாமி தனது கள்ளக்காதலி வீட்டு வாசலில் படுத்து இருந்தார். 

அப்போது அங்கு வந்த சுரேஷ் தனது தந்தை கருப்பசாமியை எழுப்பி பணம் கேட்டார். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 


இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது தந்தை கருப்பசாமியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

கைது

இது குறித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சுரேஷ் தனது தந்தையை கொலை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்து இருந்தார். 

அது சம்பவ இடத்தில் நின்று கொண்டு இருந்தது. அதை எடுப்பதற்காக சுரேஷ் நேற்று காலை அங்கு வந்தார் 

அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story