12 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்


12 முதல் 18 வயது வரையிலான  சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
x
தினத்தந்தி 24 April 2022 9:00 PM IST (Updated: 24 April 2022 9:00 PM IST)
t-max-icont-min-icon

12 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்


கோவை

12 முதல் 18 வயது வரையிலான 2.63 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா தடுப்பூசி

கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டு வருகிறது. 

அதன்படி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போட்டுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. 

அதுபோல் 12 முதல் 14 வயது வரை உள்ள சிறுவர்- சிறுமிகளுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கியது.

 அதன்படி சிறுவர்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.

அதிகாரிகள் கண்காணிப்பு

தற்போது பள்ளியில் படித்து வரும் 12 வயது முதல் 18 வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

 மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்தாத சிறுவர்கள் குறித்தும் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். 

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது

கோவை மாவட்டத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

முதல் தவணை தடுப்பூசியை 95 சதவீதம் பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 90 சதவீதம் பேரும், 56 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டு உள்ளது.

2.63 லட்சம் சிறுவர்கள்

12 முதல் 14 வயது வரை உள்ள சிறுவர்கள் 65 ஆயிரம் பேர், 15 முதல் 18 வரை உள்ள சிறுவர்கள் 1 லட்சத்து 98 ஆயிரம் பேர் என்று மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. 

தடுப்பூசி போடாத சிறுவர்-சிறுமிகள்  குறித்து ஆய்வு செய்து வருகிறோம். தடுப்பூசி போடாத பொதுமக் கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்கு சென்று போட்டுக்கொள்ளலாம்.

பொதுமக்கள் வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். 

இது தொடர்பாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். 

முகக்கவசம் அணியாமல் யாராவது சுற்றினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story