தக்காளி விலை கிடுகிடு உயர்வு


தக்காளி விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 24 April 2022 10:01 PM IST (Updated: 24 April 2022 10:01 PM IST)
t-max-icont-min-icon

தக்காளி விலை கிடுகிடு உயர்வு

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பகுதியில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. இதனால் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் அதிகபட்சமாக 20 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையானது. தற்போது கடந்த சில நாட்களாக கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தக்காளி வரத்து பெருமளவில் குறைந்துவிட்டது. 

 இதன் காரணமாக தற்போது தினசரி காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடுகிடுவென அதிகரித்து உள்ளது. இன்று நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ 43 ரூபாய்க்கு ஏலம் போனது.திடீரென ஒரு கிலோ தக்காளி கடந்த வாரத்தையை விட 23 ரூபாய் அதிகமாக ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


Next Story