கஞ்சா பதுக்கல் ஆசாமி சிக்கினார்
கஞ்சா பதுக்கல் ஆசாமி சிக்கினார்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி மேற்கு போலீசார் கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில், நகர பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது பொள்ளாச்சி சல்தானா ரோட்டில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், கிருஷ்ணம்மாள் வீதியை சேர்ந்த வெள்ளியங்கிரி(வயது 55) என்பதும், பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
மேலும் அவர் கையில் வைத்திருந்த பையில் விற்பனை செய்வதற்காக கஞ்சா பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வெள்ளியங்கிரியை கைது செய்து, கஞ்சாவை எங்கிருந்து வாங்கினார்?, வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story