புரட்சி பாரதம் கட்சி சார்பில் சகோதரத்துவ பண்பாட்டு கூடல் நிகழ்ச்சி


புரட்சி பாரதம் கட்சி சார்பில் சகோதரத்துவ பண்பாட்டு கூடல் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 25 April 2022 8:32 PM IST (Updated: 25 April 2022 8:32 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரை அடுத்த நேமம் ஆண்டரசன் பேட்டையில் புரட்சி பாரதம் கட்சியின் நிறுவன தலைவர் பூவை மூர்த்தியாரின் 70-வது பிறந்தநாளையொட்டி புரட்சி பாரதம் கட்சி சார்பில் சகோதரத்துவ பண்பாட்டு கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான டாக்டர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புத்தர் சிலையை திறந்து வைத்தார்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் மூர்த்தியாரின் ஓவியத்தை திறந்து வைத்தார். முன்னாள் அமைச்சர்கள் பா.பென்ஜமின், பி.வி.ரமணா, அப்துல் ரஹீம், முன்னாள் எம்.பி.டாக்டர் வேணுகோபால், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவன தலைவர் குடந்தை அரசன், ஆயர் ஜெயசீலன், பேராசிரியர் கதிரவன், சமூக ஆர்வலர் பாரதி பிரபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.

அப்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனத் தலைவர் மூர்த்தியார் பாடல் அடங்கிய குறுந்தகட்டை வெளியிட்டார். அதனை புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ருசேந்திரகுமார், பரணி பி.மாரி, கூடப்பாக்கம் குட்டி, கே.எம்.ஸ்ரீதர், கே.எஸ்.ரகுநாத், சித்துக்காடு ஏகாம்பரம், மதிவாசன், மாநில நிர்வாகிகள் வின்சென்ட், சரவணன், சி.பி. குமார், மணவூர் மகா, தர்மன், முகிலன், மாறன், ஏழுமலை, காமராஜ், பலராமன், வீரமணி, அன்பரசு, முத்துராமன் சைமன் பாபு, அலெக்ஸ், செல்வம், பாபு, சீனிவாசன், பன்னீர், வேணுகோபால், எட்மன்ட், கிறிஸ்டோபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story