பா.ஜனதா கட்சியினர் 140 பேர் கைது


பா.ஜனதா கட்சியினர் 140 பேர் கைது
x
பா.ஜனதா கட்சியினர் 140 பேர் கைது
தினத்தந்தி 25 April 2022 8:33 PM IST (Updated: 25 April 2022 8:33 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா கட்சியினர் 140 பேர் கைது

கோவை

கோவையை அடுத்த வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடி புகைப்படம் மாட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் திடீரென்று அந்த புகைப்படம் அங்கிருந்து அகற்றப்பட்டது. எனவே பிரதமர் புகைப்படத்தை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மீண்டும் அந்த புகைப்படத்தை அங்கு மாட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்க பா.ஜனதா நிர்வாகிகள் கோவை கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

அதில் 5 பேரை மட்டும் அலுவலகத்துக்கு உள்ளே செல்ல போலீசார் அனுமதித்தனர். அப்போது அங்கு திரண்ட நிர்வாகிகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதுடன் கோஷம் எழுப்பி, கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். உடனே அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்ட போலீசார் அவர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்தினார்கள்.

இதனால் போலீசாருக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சிலர் அங்கு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்ற முயன்றனர். அப்போது அவர்கள் ஏற மறுத்ததால் குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினார்கள்.
இதந்த போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா நிர்வாகிகள் 140 பேரை போலீசார் கைது செய்து கோவையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். 

Next Story