மனைவி இறந்த சோகத்தில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆர்.கே. பேட்டை அருகே மனைவி இறந்த சோகத்தில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மனைவி சாவு
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் மோகினிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). இவர் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது அத்தை மகள் மஞ்சு (25) வை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரசாந்தினி (8), ஹேமாவதி (4) என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் மஞ்சு மீண்டும் கர்ப்பவதியானார். 3 மாதங்களுக்கு முன் மஞ்சுவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக மஞ்சு இறந்து விட்டார். இதனால் சரவணன் மனவேதனை அடைந்தார். தான் அன்பாக பழகி வந்த மனைவி இறந்து விட்டாரே என்று ஏக்கத்துடன் காணப்பட்டார்.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் சரவணன் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் யாருமில்லாததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சீனிவாசன் என்பவர் ஆர்.கே. பேட்டை போலீசில் புகார் செய்தார். மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை செய்ததையடுத்து அவர்களுடைய 2 மகள்களும் கடைசி பிரசவத்தில் பிறந்த சீனிவாசன் சென்ற மகனும் பெற்றோர் இல்லாமல் அனாதைகள் ஆனார்கள்.
Related Tags :
Next Story