மயானத்துக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்


மயானத்துக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 25 April 2022 9:26 PM IST (Updated: 25 April 2022 9:26 PM IST)
t-max-icont-min-icon

கோலார்பட்டியில் மயானத்துக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று சப்-கலெக்டரிடம் மக்கள் மனு கொடுத்தனர்.

பொள்ளாச்சி, 

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தலைமை தாங்கினார். 

மேலும் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். ரமணமுதலிபுதூரை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சோமந்துறைசித்தூரை சேர்ந்த 2 பெண்கள் எங்களிடம் தனியார் நிதி நிறுவனத்தில் கடனுதவி பெற்று தருவதாக கூறினர். இதையடுத்து எங்களிடம் இருந்து நேரடியாக ஆவணங்களை பெற்று மகளிர் சுயஉதவிக்குழுவில் இணைத்தனர். 

கடன் தொகையான ரூ.36 ஆயிரத்தில் ரூ.5 ஆயிரம் மட்டும் கொடுத்து விட்டு மீதித்தொகையை பெற்றுக் கொண்டனர். இதற்கிடையில் அந்த தொகையை நிறுவனத்தில் செலுத்தி விடுவதாக கூறினர். ஆனால் இதுவரைக்கும் பணத்தை செலுத்தவில்லை. 


பெண்கள் 2 பேரும் பணத்தை செலுத்தாமல் மோசடி செய்ததாக தெரிகிறது. இதனால் கடன் தொகையை செலுத்த கோரி அடிக்கடி கேட்பதால் மனஉளைச்சல் ஏற்படுகிறது. எனவே, மோசடியில் ஈடுபட்ட நபர்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

தேசிய தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கத்தினர், கிராம மக்கள்  கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பொள்ளாச்சியை அடுத்த கோலார்பட்டியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பொள்ளாச்சி-பழனி செல்லும் நெடுஞ்சாலைக்கு அருகில் மயானம் இருந்தது. 

எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் இறந்தால் பல தலைமுறையாக இங்கு தான் அடக்கம் செய்து வந்தோம். தற்போது சாலை விரிவாக்கத்திற்கு ரோட்டின் இருபுறமும் பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. 

தற்போது இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு மயானம் இல்லை. ஆகவே, மயானத்திற்கு மாற்று இடம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story