மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை


மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை
x
மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை
தினத்தந்தி 25 April 2022 10:03 PM IST (Updated: 25 April 2022 10:03 PM IST)
t-max-icont-min-icon

மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை

கோவை

சென்னை வானுவம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடவர்தன். இவருடைய மகள் நந்தினி (வயது 22). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். அவர் அங்குள்ள கல்லூரி விடுதியில் தங்கி வகுப்புகளுக்கு சென்று வந்தார்.
இவருடன் தங்கியிருந்த மாணவிகள், நந்தினியிடம் நேற்று காலை வகுப்புக்கு செல்லலாம் என்று அழைத்துள்ளனர். ஆனால் நந்தினி சிறிது நேரம் கழித்து வருவதாக தெரிவித்தார்.

இதையடுத்து காலை 10 மணி அளவில் அவரது தோழிகள், நந்தினி யை அழைப்பதற்காக விடுதி அறைக்கு வந்தனர். அங்கு அறைக்கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாக தட்டியும் கதவு திறக்கப்பட வில்லை. இதனால் தோழிகள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது நந்தினி தூக்கில் தொங்கியபடி காணப்பட் டார்.

இதனால் அவருடைய தோழிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நிர்வாகிகள் விரைந்து சென்று அறைக் கதவை திறந்து நந்தினை மீட்டு கல்லூரி மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறும்போது, அறுவை சிகிச்சைக்கு பயன்படும் கத்தியை வைத்து நந்தினியின் முதலில் கை மணிக்கட்டை வெட்டி உள்ளார். இதனால் ரத்தம் வெளியேறி உள்ளது. அதன்பிறகு அவர் துப்பட்டாவால், மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து உள்ளார். அவர் தங்கியிருந்த அறையில் கடிதம் எதுவும் கைப்பற்றப்பட வில்லை. காலை 7.30 மணி அளவில் அவரது அம்மாவிடம் செல்போனில் பேசி உள்ளார். மாணவி தற்கொலை செய்தது தொடர்பாக தோழிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

Next Story